முன்னுரை
வீரத்தின்விளைநிலமான தமிழகத்தில் இராமநாதபுர மன்னர் முத்துவிஜயரகுநாத செல்லமுத்துசேதுபதி தாய் இராணி முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின் ஒரே மகளாய் 1730 ஆண்டு சக்கந்தி என்ற ஊரில் வீரதிருமகள் வேலுநாச்சியார் பிறந்தார்;
வீரத்தின்விளைநிலமான தமிழகத்தில் இராமநாதபுர மன்னர் முத்துவிஜயரகுநாத செல்லமுத்துசேதுபதி தாய் இராணி முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின் ஒரே மகளாய் 1730 ஆண்டு சக்கந்தி என்ற ஊரில் வீரதிருமகள் வேலுநாச்சியார் பிறந்தார்;
![]() |
முன்னுரை;
சுதந்திரபோராட்டவீரர்களில் முதன்மையானவர் வீரன்அழகுமுத்துகோனார் ஆவார்
பிறப்பு;
1728ஆம் ஆண்டு தந்தை மன்னர் அழகுமுத்துகோனாருக்கும் தாய் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் மகனாக பிறந்தார் (பல தலைமுறையாக தற்போதுவரை அழகுமுத்து இவர்களின்குடும்ப பெயராக உள்ளது) 1729ஆண்டு சின்னஅழகுமுத்துகோனார்பபிறந்தார்
தந்தை மன்னர் அழகுமுத்துகோனார் 1725 முதல் 1750 வரை கட்டாலங்குளம் மன்னராக வீரத்தின் விளைநிலமாக திகல்ந்தார்.தந்தை மன்னர் அழகுமுத்துகோன் 1750 ல் அனுமந்தகுடியில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார்.தந்தை இறந்தவுடன் 1750ல் மாவீரன் அழகுமுத்துகோனார் தனது 22 வயதில் மன்னராக முடிசூட்டிகொண்டார்.
கப்பம்;
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை முதன்முதலிள் தடுத்ததும் எதிர்ததும் வீரமிகு தமிழ்மண்ணில் பிறந்த வீரன்அழகுமுத்துகோனார் அவர்கள்தான்.இதனால் கோபம்அடைந்த ஆங்கிலேயஅரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மதுயூசுப்கான் என்கிற மருதநாயகத்தை அனுப்பிவைத்தது வீரன் அழகுமுத்துகோனாருக்கும் மருதநாயகத்துக்கும் இடையே பெத்தநாயக்கனூர் கோட்டையில் நடந்த கடும் போரில் வீரன் அழகுமுத்துகோனாரின் வலதுகால் சுடபட்டபின்பும் தமிழன்னை ஈன்ற வீரதிருமகன் வீரன் அழகுமுத்துகோனார் தொடர்ந்து மூன்று மணி நேரம் போரிட்டார். இருதியில் வீரன் அழகுமுத்துகோனாரும் அவருடைய ஆறு தளபதிகளும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கபட்டு நடுகாட்டூர் என்ற இடத்திற்கு கொண்டு சென்று பீரங்கிமுன் நிறுத்தி கப்பம்(வரி) கட்டசொல்லியும் மன்னிப்பு கேட்டால் உயிர்மிஞ்சும் என மிரட்டியும் அஞ்சாத வீரதிருமகன் அழகுமுத்துகோனார் கண்முன்பாகவே 248 போர்வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கபட்டனர். பீரங்கி முன் நின்ற வீரதிருமகன் அழகுமுத்துகோனாரையும் ஆறுதளபதிகளையும் மார்பில் சுடபட்டு வீரமரணம் அடைந்தனர்.
நம் முன்னோர்கள் எவ்வளவு கொடுமைகளை சந்தித்துள்ளார்கள்
இன்னுயிர் நீத்த வீரதிருமகன்களை தமிழண்ணையும் மறக்காது. தமிழனும் மறக்கமாட்டான்.
அடுத்தபகுதி வீரமங்கை வேலு நாச்சியார்
(தொடரும்)
Go to website