Monday, May 24, 2021

வீரமங்கை வேலுநாச்சியார்

முன்னுரை

ஆங்கிலேயர்களை எதிர்த்து
போரிட்டவர்களில் முதன்மையானவர் தமிழன்னை
ஈன்ரெடுத்த  பெண் வீரர்  வீரதிருமகள் வேலுநாச்சியார் அவர்களின் வீரவரலாறு;


பிறப்பு

வீரத்தின்விளைநிலமான தமிழகத்தில்  இராமநாதபுர மன்னர் முத்துவிஜயரகுநாத செல்லமுத்துசேதுபதி  தாய் இராணி முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின் ஒரே மகளாய் 1730 ஆண்டு சக்கந்தி என்ற ஊரில் வீரதிருமகள்  வேலுநாச்சியார் பிறந்தார்; 

மன்னர் முத்துவிஜயரகுநாத  செல்லமுத்துசேதுபதி அவர்கள் தன்மகளுக்கு குதிரையேற்றம் வளரி வில் வாள் வேல் போன்ற போர்கலைகளை கற்றுகொடுத்து ஆண்பிள்ளையைபோல் வீரதிருமகள்வேலுநாச்சியார்  அவர்களை  வளர்த்தார்  ;

திருமணம்;                

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாததேவர் அவர்களை  1746 ல் திருமணம் செய்துகொண்டார்.
இல்லறம் ,ஆன்மிகம், சிவகங்கை மக்கள், என மனநிறைவோடு  வாழ்ந்து வந்தார் வீரமங்கை  இராணி வேலுநாச்சியார் அவர்கள்.
கணவர்  மரணம்
போர்கலைகளில் ஒன்றான வளரி கலையில் கைதேர்ந்தவரான வீரதிருமகன் முத்துவடுகநாததேவரை எதிர்க்கும் திறன் எந்த எதிரிக்கும் இல்லை.

ஆங்கிலேயர்கள் இந்திய அதிகாரத்தை கைபற்றி (கப்பம்)வரி கட்டசொல்லி கொடுமைபடுத்தினர்.இந்த காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி வீரதிருமகன் முத்துவடுகநாததேவரிடம் (கப்பம்)வரி கட்டசொல்லி கட்டளை இட்டனர்.

நெஞ்சுரமிக்க  முத்துவடுகநாததேவர் (கப்பம்)   வரிகட்ட மறுத்ததோடுமில்லாமல் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகபோர்களம்இறங்கினார்.
கிழக்கிந்திய கம்பெனியர்களால் முத்துவடுக நாததேவரை எதிர்கொள்வது மிகசவாலாக இருந்தது ஆகையால் அவரை கொலை செய்ய ஆங்கிலேயர்கள் சதி வலை பின்னினர்.  வீரதிருமகன்முத்துவடுகநாத தேவர் சிறந்த சிவபக்தர் அடிக்கடி கோவிலுக்கு செல்லும்
தேவர் கையில் எந்த ஆயுதமும் எடுத்து செல்லமாட்டார்.இதை 
தெறிந்து கொண்ட ஜெனரல் தேவர் கோயிலிள் பூஜையில் இருக்கும் போது
நேருக்குநேர் எதிர் கொள்ள திறன் இல்லாத ஜெனரல்    (1772 ம் ஆண்டு)தேவரை மறைந்திருந்து சுட்டு
கொன்றான்.
 


           தொடரும்........


No comments:

Post a Comment

                        Go to website